வடக்கு, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். விடுதலைப்புலிகள் அன்று கோரிய தமிழீழக் கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் உரையாற்றுகையில்,
நாம் ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம். மாகாண சபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டோம். அனைத்து மக்களினதும் மதம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும். முதலீடு என்ற போர்வையில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைக்கும் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.
ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது சிங்கள மக்களாலேயே கற்கள் வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.