இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக வெற்றிடமான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020 பாராளுமன்றத் தேர்தலில் 9ஆவது பாராளுமன்றத்திற்காக திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைத்த ஒரு ஆசனத்திற்கு அமைய, அக்கட்சியின் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளகாக 16,770 வாக்குகளை பெற்ற குகதாசன் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.