தமிழகத்தில் இலங்கை தமிழர் மன அழுத்தத்தால் தீயிட்டு தற்கொலை!

திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47).

இவரது தந்தை சத்தியசீலன் உடல்நல குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்த செய்தி கேட்டு கமல்ராஜ் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்ததாகவும், கமல்ராஜ் குடும்பமும் இலங்கையில் உள்ள நிலையில் இவர் தனியாக முகாமில் இருந்து வந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று கமல்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாகவும், தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(05) கமல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நமணசமுத்திரம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *