இலங்கை தீவில் இன்று (21) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிற்பகல் 4:00 மணியளவில் நிறைவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், நள்ளிரவு 12:00 மணிவரையான காலப்பகுதிவரை எண்ணிமுடிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார திஸ்ஸனாயக்க முன்னிலையில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் ஆஜித் பிறேமதாசவும், மூன்றாம் இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றனர்.
அதே வேளை தமிழ் பொதுவேட்பாளர் அரியனேந்திரனுக்கும் கணிசமான தபால்மூல வாக்குகள் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.