தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், னையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் இன்று (22) அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் விஜயின் பெற்றோர், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது.