ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படம் தான் அதிக வசூல் செய்த படமாக இருந்தது.
அந்த சாதனையை ஜெயிலர் படம் குறுகிய நாட்களிலேயே முறியடித்து விட்டது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த சன் பிக்சர்ஸ் இப்போது படக்குழுவினருக்கு பரிசை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் லாபத்தில் ஒரு பங்கு பெரிய தொகையை ரஜினிக்கு காசோலையாக கலாநிதி கொடுத்திருந்தார்.
இதற்கு அடுத்தபடியாக ரஜினியின் வீட்டு வாசலிலேயே BMW X7 காரை கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார். ஆனால் படத்தின் இயக்குனரான நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் எதுவும் செய்யவில்லை என்ற ஒரு பேச்சு போய்க்கொண்டிருந்தது. அதற்கும் இப்போது கலாநிதி மாறன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அதாவது ரஜினியை போல நெல்சனுக்கும் குறிப்பிட்ட தொகையை காசோலையாக கலாநிதி கொடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் Porsche பிராண்ட் காரை நெல்சனுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கலாநிதி. இந்த காரின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயிலர் வெற்றியால் இவ்வாறு படக்குழுவுக்கு பரிசுகளை வழங்கி சன் பிக்சர்ஸ் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பீஸ்ட் மற்றும் ஜெயிலர் என அடுத்தடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு தான் நெல்சன் பணியாற்றி உள்ளார். மேலும் மீண்டும் ஒரு படத்தில் சன் பிக்சர்ஸ் உடன் நெல்சன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது.