எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், 12 சுயேட்சை வேட்பாளர்களும், மற்றும் பிற அரசியல் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளரும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறுமையில், ”வாக்குச் சீட்டு அச்சடிக்கும் இயந்திரங்களிலும் ஒரு அளவு உண்டு. நீளம் தொடர்பானது. குறித்த அளவை மீறினால், வாக்குச்சீட்டின் வடிவத்தை மாற்ற வேண்டும். வாக்குச் சீட்டு நீளமானால், பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். ஒரு வாக்காளர் அதிக நேரம் வாக்குச் சாவடியில் செலவிட நேரிடும்’’.என சுட்டிக்காட்டியுள்ளார்.