மொனராகலை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவுக்கு சார்பாக மொனராகலை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.