நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்த நிலையிலேயே ஜனாதிபதியின் கீழ் மேற்படி அமைச்சுப் பதவியை கொண்டுவந்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.