மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10:00 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.