இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தாம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்தார்.