ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதமராக பதவியேற்கவுள்ளதுடன், அதன்பின்னர் விஜித ஹேரத் மற்றும் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

இன்று பிற்பகல் இவர்கள் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை பிரதமர் பதவியில் இருந்து தினேஸ் குணவர்தன விலகினார். இதன்படி அவர் தலைமையிலான முழு அமைச்சரவையும் கலைந்துள்ளது.

இதனையடுத்து எவ்வித நெருக்கடியும் இன்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *