யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.
இன்று புதன்கிழமை (25) மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.
இதன்பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டதுடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விரைவாக அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவ்விடத்தில் காத்திருந்த நிலையில், போராட்டகாரர்கள் அவரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.