மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர சினோபெக் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் அதிகாரிகளை சந்தித்தார்.
சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம், டீலர்ஷிப்களுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுதல், வர்த்தக முத்திரை மற்றும் சினோபெக்கின் நாடளாவிய செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தனது ருவிட்ரர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இம் மாத இறுதிக்குள் இலங்கை தீவு முழுவதும் “சினோபெக்” செயற்படத்தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.