சென்னையில் உள்ள பிரபல தொடர்மாடி ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சென்னை கால்வாய்கள் எல்லாம் நிரம்பிவிட்டன.
இதனால் இப்போதைக்கு சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீர் வெளியேறும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் ஓடும் தண்ணீர் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
: சென்னையில் உள்ள பிரபல தொடர்மாடியொன்றில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கரணை பகுதியில் அமைந்து உள்ள குடியிருப்பு ஆகும் இது.
சிட்டிபாபு நகருக்கு அருகே இந்த தொடர்மாடி அமைந்து உள்ளது. மோங்க் லேக் என்ற ஏரிக்கு அருகே இந்த தொடர்மாடிஅமைந்து உள்ளது. தளத்தில் தண்ணீர் புகுந்து உள்ளது. ஏரி முழுமையாக நிரம்பி.. அங்கே எல்லை உடைந்து அப்படியே தண்ணீர் வெளியேறி உள்ளே வந்துள்ளது.
கீழே இருந்த பல கோடி மதிப்பிலான கார்கள் அப்படியே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தின் கொடூர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கார்கள் அப்படியே இழுத்து செல்லப்படும் காட்சிகள் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளன. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.