எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (10) கையளித்தனர்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ச.சுகிர்தன், கே.சயந்தன், இமானுவேல் ஆர்னோல்ட் மற்றும் தி.பிரகாஷ், ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி.கிருஷ்ணவேணி ஆகியோர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீடு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் இடம்பெற்றுவந்த சுமந்திரனின் அடாவடித்தனம் மற்றும் தன்னிச்சையான முடிவுகள் காரணமாக அக் கட்சியைவிட்டு பலர் வெளியேறிவந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் போட்டியில் இருந்து விலகி சியேட்சையாக இம்முறை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பாக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இறுதியில் சுமந்திரனின் வலைக்குள் வீழ்ந்துகொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.