நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
ரூபா. 35,000 கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று (13) காலை 6.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும்பாலான சிகிச்சைகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.