சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களில் 1,735 குடும்பங்களைச் சேர்ந்த 6,285 நபர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.