சீயான் விக்ரம் இன் வித்தியாசமான நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும் ஹாலிவுட் நடிகர் Daniel Caltagirone என்பவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது.
விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா திரைப்படம் ரூ. 17 கோடிக்கு விற்பனை ஆன நிலையில், தங்கலான் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.