சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2020 ல் நடைபெற்ற திலீபனின் 33ஆவது நினைவு தினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டில் சிவாஜிலிங்கம் உரும்பிராய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கத்தை அப்போது யாழ்ப்பாணம் நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்திருந்தது.

இந்நிலையில், திலீபனின் 36ஆவது நினைவு தின நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் இத் தருணத்தில் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(22) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *