சாவகச்சேரி நகை திருடிகள் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸாரினால் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன் நகைகளை திருடியதாக நம்பப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பத்தாம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பித்திருந்த நிலையில், அது தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் நேற்றைய தினம் (15) செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேக நபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

அத்தோடு உருக்கப்பட்ட நிலையில் நகைகளும் – திருட்டுச் சந்தேக நபர்களான பெண்களிடம் இருந்து நகை விற்ற 7 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை விற்ற பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆடம்பர மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *