சர்வதேச நீதிமற்றத்தினால் கைதுக்கான பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மொங்கோலியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
புடினைக் கைது செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உக்ரைன் அழைப்பு விடுத்த போதிலும், புடினுக்கு பதிலாக தலைநகர் உலான் பேட்டரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளியுறவு மந்திரி பாட்முங்க் பாட்செட்செக் அவரை அன்புடன் வரவேற்றார்.
1939 ஆம் ஆண்டு வடகிழக்கு சீனாவில் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவத்தின் மீது சோவியத் மற்றும் மங்கோலியத் துருப்புக்கள் பெற்ற வெற்றியைக் குறிக்கும் விழாவில் புடின் மற்றும் மொங்கோலியாவின் ஜனாதிபதி உக்னா குரெல்சுக் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொள்ள உள்ளனர்.
மொங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஒரு உறுப்பு நாடாக உள்ள நிலையில் புடினைக் கைது செய்யுமாறு உத்தரவு இருந்தபோதும் அந்நாடு புடினைக் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.