இன்று(01) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதற்காக பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இது இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவு அல்ல என அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.