சூரி இப்போது ஹீரோவாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை அட்டகாசமாக தொடங்கி உள்ளார். விடுதலை படத்தின் மூலம் வியக்க வைத்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி, சசிகுமார் உடன் இணைந்து கருடன் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.
ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் சூரி, சசிகுமார் இருவருடன் இணைந்து உன்னி முகுந்தன், ஷிவதா, சமுத்திரகனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.