கொழும்பில், 8 மாடிக் கட்டிடத்தில் தீ பரவல் – 15 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்கு தெருவில் உள்ள 8 மாடி கட்டடிமொன்றில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 7 தீயனைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் 15 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் பல வர்த்தக நிலையங்கள் சேததடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் காலை சமய வழிபாட்டின் போது ஏற்றப்பட்டடிருந்த கற்பூரத்தின் ஊடாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *