கொழும்பில் – இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்து T56 துப்பாக்கி, T56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 300, 9 mm ரக 50 தோட்டாக்கள் மற்றும் மைக்ரோ பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதுடன், கடந்த காலங்களில் கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இராணுவம் மற்றும் விமானப்படையிலிருந்து தப்பிச் சென்ற இருவர் அடங்கிய சந்தேகநபர்கள் 7 பேரையும் விசாரணை செய்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறறித்த வீடு நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.