கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தாக்கும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி, 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன், வாள், கைக்குண்டு போன்றவற்றுடன் மூவர் மருதானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். .
மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீ போதிராஜாராம விஹாரைக்கு பின்புறம் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று புதன்கிழமையன்று (10) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, ஸ்ரீ போதிராஜாராம விகாரைக்கு பின்புறமாக உள்ள வீட்டின் மேற்கூரையின் பின்பகுதியில் பயணப் பையிலிருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு 10 பிரதேசத்தில் வசிக்கும் 18, 34 மற்றும் 47 வயதுடையவர்கள் என விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளனர்.