கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவு தீ பரவியுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த இருவர் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 தீயணைப்புப் படையினர் 7 தீயணைப்பு வண்டிகளுடன் தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த தீ பரவலில் ஏராளமான சொத்துக்கள் நாசமடைந்துள்ளன.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.