கொலை குற்ற சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்:

சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த மூன்று பேரை நோக்கி T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் விபரங்கள்:

பெயர்: மொஹமட் அஸ்மன் ஷெரீப்டீன்  

விலாசம் : ரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம

சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்:

சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591637  

சீதுவை பொலிஸ் நிலையம்: 0112 253 522

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *