தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் நடைபெற்றது. “தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறீநேசன், பாக்கியசெல்வம் அரியேந்திரன், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளின் உரைகளும், தமிழ்த் தேசியம் சார்ந்த கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.