முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்னும் பல மனித உடல்க̀ள், மனித எச்சங்க̀ல் மீட்கப்படலாம் எனும் பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில் இடம்பெற்ற தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஊடகவியலாளர்கள் அகழ்வுப்பணி காலை ஆரம்பிக்கும் போதும், மதிய உணவு நேரம், மாலை நிறைவடையும் போதே அருகில் சென்று வீடியோ, புகைப்படங்கள் எடுத்து செய்தி சேகரிக்க முடியும் எனவும் ஏனைய நேரங்களில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ கட்டுப்பாடு விதித்துள்ளார்.
இதனால் இனிவரும் நாட்களில் அகழ்வுப் ப̀நி தொடர்பான மற்றும் அங்கு மீட்கப்படும் மனித எச்சங்க̀ல், தடையங்க̀ள் தொடர்பான உண்மையானதும், முழுமையானதுமான தகவல்கள் வெளிவருமா என்பது சந்தேகமே.
இதேவேளை நான்காம் நாள் அகழ்வுப்பணியின் போது விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் அகழ்வாய்வுகள் தொடர்பில் அன்றையதினம் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.