கேரளாவில் புதியவகை வைரஸ் தாக்கம் – இருவர் பலி: மக்களுக்கு எச்சரிக்கை!

இந்திய மாநிலம் கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் இருவர் பாதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகத்து 30ஆம் திகதி இந்த வைரஸினால் முதல் மரணமும், திங்களன்று இரண்டாவது மரணமும் ஏற்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றினால் இருவர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நிபா வைரஸ் பரவுவதை தடுக்கவும், நிலையை ஆய்வு செய்யவும் மத்திய குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பப்பட்டது என மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார். 

இந்த நிலையில்,அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முன்பு அறிவுத்தியது தெரிய வந்துள்ளது.

அத்துடன், வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதால் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *