கேரளாவில் நிலச்சரிவு – பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று  இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நேர்ந்த நிலச்சரிவினால் வெள்ளேரிமலை, மேப்பாடி, வைத்திரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாலமொன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட இந்த பாரிய நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மண்சரிவில் சிக்குண்டுள்ள மக்களை ஹெலிகெப்டர் மூலமாக மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *