முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்பாக நின்ற ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ…
“எனக்கு விடயம் தெரியாது. அழைப்பது நல்லது. நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும். ஏனென்றால் தெரிந்தே பொய் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள்.” என தெரிவிதார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் ஜோன்சன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று நாமலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.