சமையல் குக்கரை விட குறைவான எடை கொண்ட புதிய துப்பாக்கியை இந்தியா உள்நாட்டில் தயாரித்துள்ளது. இந்திய ஆயுதத் துறையின் முக்கிய தேவையாகிய நெருக்கமான போர் சூழலுக்கான (CQB) கார்பைன் துப்பாக்கி ஒன்றை DRDO மற்றும் Bharat Forge இணைந்து உருவாக்கியுள்ளன.
இது நகர்ப்புற போர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற குறுகிய தூர தாக்குதல்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது.
இந்த 5.56×30மிமீ கார்பைன், பூனேவில் உள்ள ARDE (Armament Research & Development Establishment) மற்றும் தனியாரான பாரத் ஃபோர்ஜின் கூட்டுப் பணியின் விளைவாக உருவாக்கப்பட்டது.
இது 2022-இல் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கிய 4.25 லட்சம் கார்பைன்கள் உற்பத்திக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
முக்கிய அம்சங்கள்:
எடை: சுமார் 3.3 கிலோ (ஒரு சமையல் ப்ரஷர் குக்கருக்கு சற்றே குறைவாக).
தூரம்: 200 மீட்டர் வரை தாக்கத்தை அளிக்கும் திறன்
குணம்: NATO மற்றும் INSAS தரத் துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்த முடியும் மேகசின்: 30 ரவுண்கள் கொண்ட வளைந்த வடிவில் மேகசின்
பயன்பாட்டு நன்மைகள்
இது குறுகிய இடங்களில் எளிதாக இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், கட்டிடங்களுக்குள் சோதனை, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நகர்ப் போர் போன்றவற்றில் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
இந்த துப்பாக்கியின் உருவாக்கம், இந்தியாவின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்கை முன்னிறுத்தும் முயற்சியாகவும், பொது-தனியார் கூட்டிணைப்பு மூலம் பாதுகாப்புத் துறையில் முன்னேற்றத்தை காட்டும் முக்கிய முன்னேற்றமாகவும் காணப்படுகிறது.
