கடந்த 33 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த பல மக்கள் ஆலயத்திற்கு சென்று ஆலய வளாகத்தை சுத்தப்படுத்தி பொங்கி வழிபாடு செய்தனர்.
இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.