கிளிநொச்சியில் – இன்று (18) ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய டிப்பர் சாரதியான கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே இவ்வாறுஉயிரிழந்தவராவார்.
குறித்த நபர் புகையிரதம் வருவதை அறியாமல் புகையிரத பாதையில் பயணித்த போது அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.