கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பலரும் வரவேற்றனர்.

தொடர்ந்து வைத்தியசாலை கட்டடத்தினை திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

நெதர்லாந்து அரசின் இலகுக் கடன் நிதி உதவியில் பெண்களிற்கான சிகிச்சை கூடமாக அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி கொப்பங், நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண ஆளுனர் P.S.M. சார்ள்ஸ், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *