காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வர்த்தகர், மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்கவின் மாமனார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.