“கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி” காலமானார்!

பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை   கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருதுகளையும் 2 கலசப்பதக்கங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *