தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் – லூஷா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேல் காணாமல் போன நிலைமையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
15 வயதான சிறுவன் ஒருவரும், 16 வயதான 3 சிறுமிகளும் மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் வீடு திரும்பவில்லை.அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.அதேநேரம் காணாமல் போயுள்ளதாக சந்தேகிக்கப்படும் 4 பேரில் ஒரு சிறுமி அவரது பெற்றோருக்கு அன்றைய தினம் பிற்பகல் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் தாம் நாவலப்பிட்டி பகுதிக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார். குறித்த தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்ற இலக்கத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.