காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை இதுதான் என தெரிவித்துள்ளது.
இத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. துருக்கி -பலஸ்தீன நட்பு மருத்துவமனை என்று பெயரிடப்பட்ட இந்த மருத்துவமனை, துருக்கியின் ஆதரவுடன் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.