தாயை இழந்த நிலையில் பாட்டி கண்காணிப்பில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோணம்காடு பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி திடீரென காணாமல் போயிருந்த நிலையில் தற்போது பொலிஸார் மீட்டுள்ளனர்.
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவி தங்கி இருப்பது தெரியவந்த நிலையில் அங்கு சென்று மாணவியை மீட்ட பொலிஸார் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையில், காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த சிஜின் என்ற 23 வயதான இளைஞனுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்யலாம் வா’ என அருகில் உள்ள பூங்காவிற்கு சிஜின் அந்த மாணவி அழைத்ததாகவும், மாணவியும் அவரை நம்பி சென்ற நிலையில் அங்குள்ள மலைப்பகுதியில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிஜின், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி நிலையில், எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த மாணவி, அவருடைய உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிஜினை கைது செய்த பொலிஸார் அவர்மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.