கனடாவிலில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் திடீர் மரணம்!

மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகல் கிழக்கு, மாதகல் என்ற முகவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை (25) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *