கதாநாயகனாக கலக்கி வரும் “யோகி பாபு” – வரிசையில் 4 படங்கள்!

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் காமெடியன் அனைவரையும் தெரிக விடும் படி தொடர்ந்து தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு. இவர் நடிக்க வருவதற்கு முன்பே லொள்ளு சபாவில் துணை இயக்குனராக 2 ஆண்டுகள் கதை எழுதுவதற்கு உதவியாக இருந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். பட்டத்து யானை திரைப்படத்தில் தான் இவரது நகைசுவை நடிப்பு வெளியே தெரிந்தது.

இப்பொழுதெல்லாம் இவர் இல்லாமல் ஒரு படமும் வருவதில்லை. தற்பொழுது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் யாரும் இவருக்கு இணையாக போட்டி கூட போடமுடியவில்லை, குறிப்பாக சூரி, சந்தானம் போன்ற நடிகர்களை ஓரம் கட்டி விட்டார். இவரின் சிறந்த நடிப்பினால் பட வாய்ப்புக்கள் நிறைய இவரை தேடி வருகின்றன. அப்படி இவர் இனி நடிக்க இருக்கும் 4 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

கருமேகங்கள் கலைகின்றன: இவரின் எதார்த்தமான நகைச்சுவை நடிப்பின் காரணமாக தங்கர் பச்சன் இயக்கத்தில் இப்போது வெளியான “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தில் “வீரமணி “என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிடைத்த வாய்ப்பினை எப்போதும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார். இப்படத்திலும் அதே போலத்தான் நன்றாக நடித்துள்ளார்.

சன்னிதானம் போ: ராஜ்தேவ் வைத்தியம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் சன்னிதானம் போ திரைப்படத்தில் இவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படதின் படப்பிடிப்பு கேரளாவில் இருக்கும் சபரிமலா சன்னிதானத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திரை திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியானது.

மெடிக்கல் மிராக்கிள்: கே.ஜான்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் “மெடிக்கல் மிராக்கிள்” திரைப்படத்திலும் இவர் நடித்து கொண்டு இருக்கிறார். இது முழுதாக நகைச்சுவை சார்ந்த திரைப்படம் ஆகும். இதில் விஜய் டிவியின் பிரபலங்களான கே.பி.ஒய் பாலா, டைகர் தங்கதுரை, மதுரை முத்து மற்றும் மன்சூர் அலிகான் இணைந்து நடிக்க இருக்கின்றார்கள். அது மட்டுமின்றி குக் வித் கோமாளியில் வந்த தர்ஷா குப்தாவும் நடிக்க இருக்கிறார்.

பூமர் அங்கிள்: ஸ்வதேஸ் ம்.ஸ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் “பூமர் அங்கிள்” திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதுவும் நகைச்சுவையை திரைப்படமாகும். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் கதாநாயகனாக “கோலமாவு கோகிலா” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நகைச்சுவை நடிகர்களான சூரி, சந்தானம் போன்றவர்களுக்கு இவர் டஃப் கொடுதத்து வருகிறார். இவரது நடிப்பினால் அனைவரையும் பின்னே தள்ளிவிட்டு, சிறந்த நகைசுவை நடிகராக மாஸ் காட்டுகிறார்.

வானவன்: சஜின் கே. சுரேந்திரன் என்னும் கேரளாவை சேர்ந்த புதுமுக இயக்குனர், இயக்கத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படமே வாணவன் ஆகும். திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மதுரை மற்றும் சென்னையில் சேர்ந்த கிராமப்புறங்களை சுற்றி படம் பிடித்துள்ளனர். குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என பட குழுவினர் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *