எமது கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பதுபோல எமது கட்சி காணப்படுகின்றது.
இவ்வாறான சூழல் இருக்கும் போது வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.