கட்சியை இளையோரிடம் ஒப்படைக்க விக்னேஸ்வரன் முடிவு!

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

எமது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளது. 

தமிழ் தேசியத்தில் எம்முடன் இணைந்து செயற்பட கூடியவறான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அவருடன் சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கமும் கலந்து கொள்ளவுள்ளார். 

எமது மாநாட்டிற்கு அனைத்து தரப்பினரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். 

எங்களுடைய கட்சி இதுவரை பல கஷ்டங்களை எதிர் கொண்டுஇ தற்போது நல்லதொரு நிலைக்கு வந்துள்ளது. எமது கட்சியை பதிவு செய்ய விட கூடாது என்று கூட பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.அது கூட எமக்கு சில காலங்களுக்கு முன்னரே தெரிய வந்துள்ளது. 

இன்று எமது கட்சி இன்று பதிவு செய்யப்பட்ட பல இளைர்களை தன்னகத்தே கொண்ட கட்சியாக காணப்படுகிறது. 

நாங்கள் இதுவரையில் என்ன செய்தோம் என கேட்க கூடும். பல நாடுகளின் உயர்ஸ்தானிகர் இ தூதுவர்கள் என பல்வேறு பட்ட தரப்பினர்களுடன் எமது பிரச்சனைகள் தொடர்பில் பேசி இருக்கிறோம். எமது கருத்துக்களை அவர்கள் உன்னிப்பாக செவிமடுத்து சிலதை செய்துள்ளார்கள். 

இன்று உலக நாடுகள் மத்தியில் இலங்கைக்கான ஆதரவு குறைந்துள்ளது. பல நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியுளள்னர் 

தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் பல தரப்பிடமும் எடுத்து கூறி வெளிக்கொணர்ந்து உள்ளோம். 

அது மட்டுமின்றி எங்களுடைய பிரச்சனைகளை பற்றி சிங்களத்தில் பல விடயங்களை கூறி வருகின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து சிங்கள மொழியில் எடுத்து கூறியுள்ளோம். இன்னமும் கூறி வருகிறோம். 

அதேவேளை எமது மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளையும் செய்து வருகின்றோம். 

எமது கட்சி இளையோரின் கட்சியாகும். அப்ப நீங்கள் ஏன் தலைவாராக இருக்கிறீர்கள் என கேட்கலாம். குழந்தையை தாயொருவர் பிரசவிப்பதற்கு முன்னர் அந்த குழந்தை ஆரோக்கியமான பிறக்க வேண்டும் என்பதற்காக செவிலி தாயொருவர் கூட இருந்து அந்த தாயை பார்த்துக்கொள்வார். 

அதேபோலவே இந்த கட்சியை நல்ல நிலையில் வளர்த்துஇ இளையோரிடம் கையளித்து விட்டுஇ சம்பந்தன் போல போய் சேர்ந்து விடுவேன். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *