கடலில் காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபா வழங்குவதாக முதல்வர் அறிவிப்பு:

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சில மீனவர்கள் காணாமல் போன சம்பவத்தில் காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக இந்திய கடலோரப் படையினர் தேடியும் மீனவர் ராமச்சந்திரன் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினரின் சூழ்நிலையில் கருத்தில் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *