கடமைகளை பொறுப்பேற்றார் வட மாகாண புதிய ஆளுநர் நா. வேதநாயகன்:

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாண ஆளுநராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும் போது இதனைத்  தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்வதற்குரிய ஒருவர் என்பதை தெரிவிப்பதோடு இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இப்பதவியை பெற்றுக் கொள்கிறேன்.


மேலும், இந்த இடத்தில் வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இப்பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *