இலங்கையில் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவு 2023ஆம் ஆண்டில் 103,283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், இந்நாட்டில் குடும்பமொன்றுக்கு 2022ஆம் ஆண்டில் மாதாந்த நுகர்வு செலவு 88,704 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் குடும்பமொன்றுக்கான மாதாந்த நுகர்வு செலவு 103,283 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் ஒரு குடும்பமானது உணவு அல்லாத பொருட்களுக்கு அதிகம் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டில் இந்நாட்டில் குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவில் 53.9 வீதம் உணவு அல்லாத பொருட்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மாதாந்த நுகர்வு செலவில் 46.12 வீதம் மாத்திரமே உணவுக்காக செலவிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்நாட்டில் குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவில் 56.2 வீதம் உணவு அல்லாத பொருட்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. அதே ஆண்டில் உணவுக்காக 43.8 வீதம் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் உணவு அல்லாத பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விலை அதிகரிப்பானது குறைவான மட்டத்திலேயே காணப்பட்டு வருகின்றது.